×

ரேஷன் கடைகளில் 30 நாட்களுக்குள் அனைத்து பொருட்களும் வழங்க நடவடிக்கை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் மக்களுக்கு தரமான அரிசி வழங்கப்படுகிறது. முந்தைய காலத்தில் இருந்ததை விட தற்போது நியாய விலைக்கடைகளில் அனைத்து பொருட்களும் 30 நாட்களுக்குள் கிடைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு துறையில் பல புதிய மாற்றங்கள் வர உள்ளது. வருகிற ஜனவரி மாதத்தில் முதல்வருடன் கலந்து ஆலோசனை செய்து குளறுபடுகளை தீர்க்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பகுதி நேரக்கடை என்பது 150 கார்டுகள் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு தனியாக ஒரு கடை என தற்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதுவே எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் போதைப் பொருள் விற்பனை பழக்கத்தை ஒரே ஆண்டில் முழுமையாக தடுத்து நிறுத்திய அரசு திமுக அரசு. இவ்வாறு அவர் கூறினார்….

The post ரேஷன் கடைகளில் 30 நாட்களுக்குள் அனைத்து பொருட்களும் வழங்க நடவடிக்கை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,I. Periyasamy ,Madurai ,Minister of Cooperatives ,I.Periyaswamy ,Madurai airport ,
× RELATED திண்டுக்கல்லில் கூட்டுறவு பண்டக...