×

போலீஸ்காரர் தற்கொலை

பொள்ளாச்சி: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள பருத்தியூரை சேர்ந்தவர் மணியரசு (23). இவர், பொள்ளாச்சி அருகேயுள்ள கோமங்கலம் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். போலீஸ்நிலையம் அருகேயுள்ள காவலர் குடியிருப்பில் தங்கியிருந்தார். நேற்றிரவு பணிமுடித்து குடியிருப்புக்கு சென்றவர் இன்று காலை மீண்டும் பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அங்கிருந்த காவலர்கள், மணியரசு தங்கியிருந்த அறைக்கு சென்று கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் மணியரசு, சடலமாக கிடந்தார். இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்….

The post போலீஸ்காரர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Maniarasu ,Baruthiyur ,Udumalai ,Tirupur ,Komangalam police station ,Dinakaran ,
× RELATED கோடை மழையையடுத்து தக்காளி சாகுபடி...