×

கீரனூர் அருகே வனப்பகுதியில் 14ம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டுபிடிப்பு

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ரகுநாதபுரம் வனப்பகுதிக்குள் கலைநயமிக்க சிற்பங்கள் கேட்பாரற்று கிடந்தது. இந்த தகவல் அறிந்ததும் தொல்லியல் துறை ஆர்வலர்களான பேராசிரியர் முத்தழகன் தலைமையில் கீரனூர் முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் நேற்று கள ஆய்வு செய்தனர். அதில், அங்கு கிடப்பது கிபி 14ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர்களின் கற்றளி(கல் தூண்) என்பது தெரியவந்தது. மேலும் பிற்கால பாண்டியர்களின் கலைநயமிக்க சிற்பங்கள், வேலைப்பாடு மிக்க தூண்கள், கல்வெட்டுகளுடன் கூடிய கற்கள் அப்பகுதி முழுவதும் சிதறி கிடந்தது தெரியவந்தது. எனவே இந்த கலைநயமிக்க சிற்பங்களை தொல்லியல்துறையினர் சேகரித்து அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டுமென தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post கீரனூர் அருகே வனப்பகுதியில் 14ம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Keeranur ,Ragunathapuram forestland ,Pudukkotta district ,
× RELATED திருமாந்துறை ஊராட்சி கீரனூரில்...