×

வீட்டில் அள்ள அள்ள குறைவில்லாத செல்வம் பெருகிட இவரை எப்படி தான் முறையாக வழிபடுவது?

செல்வத்திற்கு அதிபதியாக விளங்குபவர் குபேரர் மற்றும் மகாலட்சுமி. இவர்கள் இருவரையும் கவர்ந்து விட்டால் நம் வேலை முடிந்தது. ஆனால் எப்படி இவர்களை கவர்வது என்று தெரியாமல் பலர் இருக்கிறார்கள். தெய்வங்களின் அருள் மிக மிக சுலபமாக கிடைக்கும் என்று சொன்னால் யாரும் நம்பபோவதில்லை. ஆனால் அது தான் உண்மை. உதாரணத்திற்கு அம்மாவிடம் அடம்பிடித்து எதையும் சாதிக்க முடியாது. சிறு குறும்பு செய்து மனதை கவர்ந்து விட்டால் போதும். பிறகு எது கேட்டாலும் நமக்கு உடனே கிடைக்கும். அன்பு தான் எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும். கடவுளும் அப்படித்தான். அன்பு காட்டினால் மனம் இறங்காத கடவுள் என்று யாரும் இல்லை. வம்பு செய்தால் அதற்கான பலனையும் அனுபவிக்க வேண்டியது தான். அதில் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வழிபாடு முறைகள் இருக்கின்றன. அவற்றை முறையாக கடைபிடித்தால் அவர்களின் அருளை கட்டாயம் பெற முடியும்.

அப்படி மகாலட்சுமியை வழிபட பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு மகாலட்சுமிக்கு நெய் தீபம் போட்டு, சிவப்பு மற்றும் வெள்ளை நிற வாசனை மிக்க மலர்களால் அர்ச்சனை செய்து மகாலட்சுமி மந்திரம் உச்சரித்து வழிபட்டு வந்தால் போதுமானது. வேறு ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. இதனை வாரம் தவறாமல் செய்து வந்தாலே மகாலட்சுமி அருள் கிடைத்து விடும். இது போல குபேரனுக்கு முறையாக பூஜை செய்தால் குபேர அருள் கிடைத்து வாழ்வில் அள்ள அள்ள குறைவில்லாத செல்வ வளம் பெருகிட உதவும். நீங்களே ஆச்சரியப்படும் வகையில் மாற்றங்கள் நிச்சயமாக உங்களது வாழ்வில் உருவாகும். இப்போது லக்ஷ்மியை குளிர வைத்தாயிற்று அதே போல் குபேரரை எப்படி குளிர வைப்பது என்று தெரியுமா? மஹாலக்ஷ்மிக்கு வெள்ளிக்கிழமை உகந்த நாளாக இருக்கிறது போல குபேரருக்கு வியாழன் கிழமை உகந்த நாளாக இருக்கிறது.

ஒவ்வொரு வியாழன் அன்றும் மாலை வேளையில் தவறாமல் துளசி அர்ச்சனையும், 108 நாணய அர்ச்சனையும் செய்ய வேண்டும். குபேரருக்கு நாணயங்களை கொண்டு அர்ச்சனை செய்தால் மட்டும் போதாது. துளசி அர்ச்சனையும் செய்ய வேண்டும். எப்போதும் குபேரன் சிலையை சுற்றி நாணயங்கள் இருக்க வேண்டும். குபேரனுக்கு நாணய அர்ச்சனை செய்யும் போது 108 குபேரர் போற்றி கூறுவார்கள். முடிந்ததும் துளசியால் அர்ச்சனை செய்து நிவேதனமாக கற்கண்டும், நெல்லிக்கனியும் அவசியம் வைக்க வேண்டும். வியாழன் மாலையில் இந்த பூஜையை முடித்து தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை காலையில் மஹாலக்ஷ்மி பூஜை செய்யும் போது இருவரின் அருளும் ஒரு சேர கிடைக்கும். ஏனெனில் வியாழன் மாலை தொடங்கும் குபேர காலம் மறுநாள் வெள்ளியில் காலை வரை நீடிக்கிறது. இந்த குபேர காலத்தில் செய்யபடும் பூஜைகள் அதிக பலன் தருபவை.

இந்த இரு கடவுளரும் செல்வதிற்கு அதிபதியாக விளங்கக்கூடியவர்கள். இவர்களை சுற்றி எப்போதும் நறுமணம் வீசுமாறு பார்த்து கொள்வது மிக பெரிய பலன்களை தரும். பச்சை கற்பூரம், துளசி சேர்த்த தீர்த்தம் வைக்கலாம். ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். பூஜைக்கு உகந்த எண்ணெண்ணையாக நல்லெண்ணெய் மற்றும் நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வியாழன் அன்று காலையில் பூஜை பொருட்களை விலக்கி வைப்பது நல்லது. இது போல தொடர்ந்து செய்து வந்தாலே போதும். உங்கள் வீட்டில் எப்படிபட்ட தீய சக்திகள் இருந்தாலும் விலகி ஓடி விடும். தடையற்ற பணவரவு தாராளமாக வந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!