×

காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் தமிழக வீராங்கனை பவானிதேவி..!!

பர்மிங்காம்: பர்மிங்காம் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார். லண்டனில் நடந்த போட்டியில் மகளிர் சோபர் பிரிவில் இந்தியா சார்பில் பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் 2022 ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கியது. இறுதி சுற்றுகள் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி, காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பின் தொடக்கச் சுற்றில் அலெக்ஸாண்ட்ரா டேவிட்டை எதிர்கொண்டு 15-6 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப்பின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து, அரையிறுதிச் சுற்றில் ஸ்காட்லாந்தின் லூசி ஹையாமை எதிர்கொண்டு 15-5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் வெரோனிகா வாசிலேவாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 15-10 புள்ளிக் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்று அசத்தியுள்ளார். 2019ம் ஆண்டு இதே போட்டியில் தங்கம் வென்ற பவானி தேவி, இரண்டாம் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சென்னையை சேர்ந்த பவானிதேவி 2020ம் ஆண்டு ஹங்கேரியில் நடந்த ஃபென்சிங் உலகக் கோப்பையின் காலிறுதியில் வெற்றிபெற்று டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.  டோக்கியோ ஒலிம்பிக் தகுதி பெற்ற ஒரே இந்திய ஃபென்சர் என்ற பெருமையையும் பவானிதேவி வசமானது குறிப்பிடத்தக்கது….

The post காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் தமிழக வீராங்கனை பவானிதேவி..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Bhavanidevi ,Commonwealth ,Birmingham ,Birmingham Commonwealth Penstration Championship ,London ,Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...