×

சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் குறுவை சாகுபடியில் களை எடுப்பு பணி தீவிரம்-இன்னும் ஒரு வாரம் நீடிக்கலாம் என்று விவசாயிகள் தகவல்

சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் குறுவை சாகுபடியில் களை எடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இன்னும் இந்த பணி ஒரு வார காலத்தி்ற்கு நீடிக்கலாம் என்று விவசாயிகள் தெரிவி்க்கின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 15 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. உர செயல்பாடு, மருந்து தெளிப்பு போன்ற பணிகள் செய்யப்பட்டது. பயிர்கள் தற்போது வளர்ந்துள்ளன.இந்நிலையில் திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோயில், கதிராமங்கலம், எடக்குடி, வடபாதி, மங்கைமடம், திருவாலி, கிழச்சாலை காத்திருப்பு, செம்பதனிருப்பு அல்லி விளாகம், நாங்கூர், கீழத்தென்பாதி, ஆதமங்கலம், பெருமங்கலம், அகணி நிம்மேலி,வள்ளுவக்குடி கொண்டல் கடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்கள் வளர்ந்துள்ளன. தற்போது வயல்களில் களை வளர்ந்துள்ளது.இதனால் தற்போது விவசாயிகள் முழு வீச்சில் நெற்பயிர்களில் ஊடுருவி முளைத்துள்ள களை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் வயல்களில் உள்ள களை எடுக்கும் பணிக்காக ஏராளமான பெண் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், சில இடங்களில் களை எடுப்பதற்கு பெண் தொழிலாளர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுபோன்ற நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பெண் தொழிலாளர்கள் களை எடுப்பு பணிக்காக அழைத்து வரப்படுகின்றனர். மேலும் ஒரு இடங்களில் களைகளை கட்டுப்படுத்த களைக்கொல்லி பயன்படுத்தி வருகின்றனர்.பெண்களை வைத்து வயல்களில் களை எடுக்கும்போது வயல்களில் பெண் தொழிலாளர்களின் கால்கள் பதியும். உரம் இடும் போது கால் பதிந்த குழிகளில் உரம் விழுந்து பயிர்கள் நன்கு வளரும். இதனால், குறிப்பாக பெண் தொழிலாளர்களை வைத்து வயல்களில் களையெடுக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சில இடங்களில் கதிர் வருவதற்கு மேல் உரங்களை விவசாயிகள் இட்டு வருகின்றனர் . கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் களைகள் அதிகளவில் முளைத்துள்ளதாகவும், இதனால் உடனடியாக களைகளை அப்புறப்படுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும், உடனடியாக களை எடுக்கவில்லை என்றால் மகசூல் குறையும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் வயல்களில் களைகள் அதிகமாக இருப்பதால், களையெடுப்பதற்கு செலவும் கூடுதலாக ஏற்படும். தற்போது நடவு செய்த குறுவை சாகுபடி வயல்களில் களை எடுக்கும் பணி இன்னும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கும். ஒரு வேளை மழை பெய்தால் களை எடுக்கும் பணிகள் இன்னும் தாமதமாகும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்….

The post சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் குறுவை சாகுபடியில் களை எடுப்பு பணி தீவிரம்-இன்னும் ஒரு வாரம் நீடிக்கலாம் என்று விவசாயிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : tilluga ,Mayiladuthura District ,Seerkazhi Thaluga ,Dinakaran ,
× RELATED தரங்கம்பாடி பகுதியில் குறுவை நடவு பணியில் விவசாயிகள் மும்முரம்