×

மாயாற்றில் 5,000 கனஅடி வெள்ளம் : தனித் தீவு போல காட்சியளிக்கும் தொங்குமாரடா பகுதி…

நீலகிரி: மாயாறர் ஆற்றில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளப் பெருக்கால் தெங்கு மரஹாடா, அல்லி மாயார், கல்லம்பாளையம் கிராமங்கள் தனித்தீவாக மாறியிருக்கின்றன. கடந்த 10 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை மற்றும் கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் இரவு, பகலுமாக கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பாண்டியாறு, புன்னம்புழா ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல், உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மாயார் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான பைகாரா அணை, வெண்பா அணை ஆகிய 2 அணையிலிருந்து 3000 கனஅடி தண்ணீர் பாதுகாப்பு கருதி  மாயார் ஆற்றுக்கு வெளியேற்றப்படுகிறது. தற்போது மாயார் ஆற்றில் 5000 கனஅடி தண்ணீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க கூடிய அல்லி மாயார், கல்லம்பாளையம் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருக்கக்கூடிய மக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஓடக்கூடிய முக்கிய நதிகளில் மாயார் ஆறு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கடந்த சில நாட்களாகவே ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கிராம மக்கள் பரிசலில் வந்து அங்கிருந்து பவானிசாகர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகளுக்கு வந்து கொண்டிருந்தனர். ஆனால், கடந்த 2 நாட்களாக கனமழை, அணையின் நீர் திறப்பு அதிகரித்தன் காரணமாகவும் ஆற்றின் இரு கரைகளும் தொட்டவாறு தண்ணீர் ஓடுவதால் பரிசலை இயக்க முடியாதா நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கிராமத்திலிருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே, அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தெங்கு மரஹாடா பகுதியானது தற்போது நீலகிரி மாவட்டத்திலிருந்து, ஈரோடு மாவட்டத்திலிருந்தும் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு தனி தீவு போல காட்சியளிக்கிறது. …

The post மாயாற்றில் 5,000 கனஅடி வெள்ளம் : தனித் தீவு போல காட்சியளிக்கும் தொங்குமாரடா பகுதி… appeared first on Dinakaran.

Tags : Mayai ,Thangumarada ,Nilgiris ,Mayar River ,Teng Marahada ,Alli Mayar ,Kallampalayam ,Mayar ,Thangumaradha ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு...