×

கிச்சன் டிப்ஸ்

* மோர்க்குழம்பு  வைக்கும்போது  அரை நெல்லிக்காய்களை  அரைத்துப் போட்டால் சுவை கூடும்.* வறுத்த  வேர்க்கடலையை  நன்கு பொடித்து  மசால்வடை மாவுடன்  சேர்த்து வடை சுட்டால்  சுவையாக  இருக்கும்.* கோதுமை  மாவில்  ஒரு கைப்பிடி  மைதா,  ஒரு கைப்பிடி  கேழ்வரகுமாவும்  சேர்த்து சப்பாத்தி  செய்தால்  மிருதுவாகவும்,  ருசியாகவும்  இருக்கும்.* ஜவ்வரிசிப் பாயசம்  செய்யும்போது 2 ஸ்பூன்  வறுத்த கோதுமை மாவை பாலில் கலந்து  ஊற்றினால் பாயசம்  கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்.* புதினா, தக்காளி இரண்டையும்  நன்கு அரைத்து  பஜ்ஜி மாவில்  கலந்து சுட்டால்  மணமும் சுவையும்  வித்தியாசமாக  இருக்கும்.– எம்.வசந்தா, சிட்லபாக்கம்.* வறுத்த புழுங்கல் அரிசியை மாவாக்கி  வைத்துக்கொண்டு காய்கறிக்கூட்டு செய்யும்போது கடைசியில் இதை லேசாக தூவி இறக்கினால்  மணமாக இருக்கும்.* பருப்பு உருண்டைக் குழம்பு. தயாரிக்கும்போது உருண்டை கரையாமல் இருக்க  வேண்டுமானால் ஒரு தேக்கரண்டி அரிசி மாவை  உருண்டையுடன்  உருட்டிப் போட வேண்டும். * உளுந்தவடைக்கு மாவு ஆட்டும்போது  சிறிதளவு  துவரம் பருப்பு  சேர்த்து  ஆட்டினால் வடை மெதுவாக இருக்கும்.* வாடிய பீன்சை சிறிது நேரம் குளிர்ந்த நீரில்  போட்டெடுத்து பிறகு  சமையல்  செய்தால்  பீன்ஸ் பிரெஷ்ஷாக  இருக்கும்.* புளித்த தோசை மாவில் சுக்குப்பொடி  கலந்து, ஊத்தப்பம் செய்தால் சுவையாகவும் இருக்கும். எளிதில்  ஜீரணமும்  ஆகும்.* ரவா உப்புமா மீந்துவிட்டால் அதில்   சிறிதளவு  அரிசி  மாவைக் கலந்து  வடைபோல் தட்டி எண்ணெயில்  பொரித்து  எடுக்க சுவையான  வடை தயார். – ஜி.இனியா,  கிருஷ்ணகிரி* வெஜிடபிள் சாலட் செய்யும்போது, நீர் அதிகமாகிவிட்டால் நான்கைந்து பிரெட் துண்டுகளை வறுத்து சேர்த்தால் சரியாகிவிடும். சுவையும் நன்றாக  இருக்கும்.* மோர்க்குழம்பு செய்து இறக்குவதற்கு  முன்னதாக  சிறிது  தேங்காய்  எண்ணெய் விட்டு இறக்கினால் அதன் சுவையே தனி. – சே.தமிழரசி, அயப்பாக்கம்.* மளிகைப் பொருட்களை  வாங்கி வந்ததுமே டப்பாக்களில் கொட்டிவிடாமல், சிறிது நேரம்  வெயிலில் காயவைத்து சுத்தப்படுத்தி பிறகு டப்பாக்களில் கொட்டி  மூடி வைக்கவும். எளிதில்  வண்டுகள்  வைக்காது.  அவசரத்துக்கு சுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.* புளி புதியது  என்றால்  அதை வெயிலில்  காய வைத்து, அதிலிருக்கும் தூசு, கொட்டைகளை  நீக்கிவிட்டு, ஜாடியில்  போட்டு  வைக்கவும்.* ரவையுடன்  இரண்டு கரண்டி சாதத்தை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கலந்து ரவா  தோசை செய்தால் சூப்பராக இருக்கும்.* உருளைக் கிழங்கை  நன்றாக  மசித்தும்  அல்வா  செய்யலாம்.  அதனுடன்  சிறிது  பாதாம்  எஸன்ஸ்  சேர்த்தால்  உருளைக்கிழங்கு  அல்வா  பாதாம்  அல்வா  சுவையில்  இருக்கும். – அமுதா  அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி. * வாணலியில் செய்வதைவிட  குக்கரில்   மூடி  போடாமல் உப்புமா செய்தால், கிளறுவதும்  சுலபம். எளிதில்  அடியும் பிடிக்காது. * பனீர்  பட்டர் மசாலா போன்ற கிரேவியில்  உப்பு அதிகமானால் வேக வைத்த  உருளைக் கிழங்குடன் சிறிது ஃபிரெஷ் க்ரீமை சேர்க்க  சுவை  கூடும்.– எஸ்.சரோஜா, சென்னை.* புளித்த தோசைமாவில்  சிறிதளவு  சர்க்கரை  கலந்து வார்த்தால், புளிப்புச் சுவை குறைவாக  இருக்கும்.* தேங்காய் பர்ஃபி  செய்யும்போது  சிறிது  கடலைமாவு சேர்த்து  செய்தால்,  சுவை பிரமாதமாக  இருக்கும்.– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED நெல்லை மாவட்ட காங்., தலைவர்...