×

உளுந்தை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 160 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்: திமுக ஊராட்சி மன்றத் தலைவர் வழங்கினார்

திருவள்ளூர்: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமலேயே கல்விக் கட்டணத்தை செலுத்தினர்.  ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள் ஆல் பாஸ் என்று அரசு அறிவித்ததால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி வந்த  ஏராளமானோர் அரசுப் பள்ளிகளை நாடத் தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் அரசுப் பள்ளிகளில் நோட்டுப் புத்தகம், சைக்கிள் உள்ளிட்ட மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசே ஏற்படுத்தி தந்தது. இதனால் ஏழை எளிய மக்கள் கடன் வாங்கி தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்தவர்கள், அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க ஆரம்பித்தனர். அதனால் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக கிராமம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அரசு அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில்  உள்ள உளுந்தை ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ மாணவிகள் கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நடந்தே பள்ளிக்கு வருகை தருகின்றனர்.  இதனால் மாணவ மாணவியர் ஆர்வமுடன் கல்வி கற்க ஏதுவாகவும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு, அந்த பள்ளியில் பயிலும் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் சைக்கிள் வாங்கித் தர முடிவு செய்த திமுவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கே.ரமேஷ் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதனையடுத்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவரும், திமுகவின் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான உளுந்தை  எம்.கே.ரமேஷ் தலைமை தாங்கி அரசு பள்ளி மாணவ மாணவிகள் 160 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி மேலும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். அவருடன் திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி மீனாட்சி, ராஜரத்தினம், பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தா,ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வாசுதேவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் திரளான அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விலையில்லா சைக்கிள்களை பெற்றுக் கொண்ட மாணவ மாணவியரும்,  அவர்களின் பெற்றோரும் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியனை தெரிவித்து கொண்டனர்….

The post உளுந்தை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 160 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்: திமுக ஊராட்சி மன்றத் தலைவர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : President ,Dizhagagam ,Piratal ,Forum ,Lulunthai Rasinar High School ,Thiruvallur ,Tamil Nadu Government ,Innakaram High School ,Kazhagam Pavilance Forum ,
× RELATED வதந்திகள் மூலம் சர்வதேச அரங்கில்...