சென்னை: ‘பன் பட்டர் ஜாம்’ படத்துக்காக விஜய் சேதுபதி எழுதிய பாடலை நடிகர் சித்தார்த் பாடினார். ‘பன் பட்டர் ஜாம்’ படத்தில் காதலின் அழுத்தத்தை சொல்லும் விதமாக டியூன் ஒன்றை இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா மெலோடியாக அமைத்தார். இதற்கு யதார்த்தமான வரிகள் அமைய வேண்டும் என்று நினைத்தார். அதற்காக நிவாஸினி நண்பரான நடிகர் விஜய் சேதுபதியிம் கேட்கலாம் என்றி நினைத்து, அவரிடம் கேட்டதும் ஒத்து கொண்டு, “ஏதோ பேசத்தானே.. என் நெஞ்சுக்குள்ள ஆச வீசத்தானே..” என்று வரிகளை உடனே எழுதி கொடுத்தார்.
டூயட் பாடலான இதை நடிகர் சித்தார்த் பாடியுள்ளார். அவருடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் “காவாலா” பாடலை பாடிய ஷில்பா ராவ் பாடியுள்ளார். ‘பன் பட்டர் ஜாம்’ படத்தை ரெயின் ஆஃப் ஏரோவ்ஸ் நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். ராஜூ, ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா நடிப்பில், இன்றைய தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.