×

முதலாம் காலாண்டு கணக்கு முடிவுகள் வெளியீடு.! சிட்டி யூனியன் வங்கியின் நடப்பு நிதியாண்டில் ரூ.89,706 கோடி வியாபாரம்: நிர்வாக இயக்குநர் காமகோடி தகவல்

சென்னை: சிட்டி யூனியன் வங்கி 2022-2023ம் நிதியாண்டின் முதலாம், காலாண்டு கணக்கு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் மொத்த வியாபாரம் ரூ.89,706 கோடி என்று வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.1317 கோடியாகவும், அதில்  இதர வருமானம் ரூ.218 கோடியாகவும் உள்ளது. மொத்த லாபம் ரூ.447 கோடியாகவும், நிகர லாபம் ரூ.225 கோடியாகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் வங்கியின் மொத்த வியாபாரம் ரூ. 89,706 கோடியாக உள்ளது. மேலும் வங்கியின் வைப்பு தொகை மற்றும் கடன்கள் முறையே ரூ.48,772 கோடியாகவும், வங்கியின் நிகர வராக் கடன் 2.89% வங்கியின் சொத்தின் மீதான வருவாய் 1.46%. ஆகவும் உள்ளது. வங்கியின் நிகரமதிப்பு கடந்த ஆண்டில் இருந்த மதிப்பான ரூ.5952 கோடியிலிருந்து ரூ.6759 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கி 727 கிளைகள் மற்றும் 1,691 தானியங்கி பட்டுவாடா இயந்திரங்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.  தற்போது எம்/எஸ்.42 சிஎஸ் கார்ட்ஸ் தொழில் நுட்ப வசதியுடன் வங்கியின் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கியின் க்ரெடிட் கார்டான (CUB DHI VISA) க்ரெடிட் கார்டை எளிதாக பெறமுடியும். மேலும் இந்த புதிய கார்டில் தொழில் துறையில் கிடைக்கும் அனைத்து வசதிகளும், அம்சங்களும் இதில் கிடைக்கும். வங்கியின் ஆல் இன் ஒன் மொபைல் பேங்கிங்கில் – UPI மூலம் பணம் அனுப்பும் முறையை அறிமுகம் செய்துள்ளோம். இவ்வாறு வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி கூறினார்….

The post முதலாம் காலாண்டு கணக்கு முடிவுகள் வெளியீடு.! சிட்டி யூனியன் வங்கியின் நடப்பு நிதியாண்டில் ரூ.89,706 கோடி வியாபாரம்: நிர்வாக இயக்குநர் காமகோடி தகவல் appeared first on Dinakaran.

Tags : City Union Bank ,Managing Director ,Kamakodi ,CHENNAI ,Dinakaran ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு...