×

ஏரி சீரமைப்பு பணி தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு: அதிகாரிகள் பங்கேற்பு

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 16வது வார்டுக்கு உட்பட்ட கடப்பாக்கத்தில் சுமார் 145 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடப்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை கடப்பாக்கம், கன்னியம்மன்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஏரியை தனியார் நிதி உதவியுடன் ரூ.55 கோடியில் தூர்வாரி புனரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஏரியை தூர்வாரி, கரையை உயர்த்தி நடைபாதை, மரம் நடுதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் கடப்பாக்கம் பகுதியில் நேற்று நடைபெற்றது. சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மழைநீர் வடிகால் மேற்பார்வை பொறியாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் தேவேந்திரன், கோவிந்தராஜ் காமராஜ் ஆகியோர், கடப்பாக்கம் ஏரியில் நடைபெற உள்ள பணிகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி, கருத்துக்களை கேட்டனர். அப்போது  பெரும்பாலான விவசாயிகள் கடப்பாக்கம் ஏரியில் உள்ள 4 மதகுகளை சீரமைக்க வேண்டும், ஏரியில் விவசாயத்திற்கு நீரை தடையில்லாமல் எடுக்கவும், மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்….

The post ஏரி சீரமைப்பு பணி தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு: அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kadapakkam ,16th Ward ,Manali ,Mandal ,Chennai Corporation ,
× RELATED 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த பொது...