×

அனைத்து வீரர்களும் எதிர்காலத்தில் சிறந்து விளையாட வாழ்த்துக்கள்: காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் 4வது இடத்தை பிடித்து அசதியது. பதக்க பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தன். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்கக்காரனாகிவிட்ட சரத் கமல், சத்தியன் ஞானசேகரன், தீபிகா பல்லிகல், இந்தியாவின் பெருமை பி.வி.சிந்து, ஆற்றல்மிகு லக்‌ஷ்யா சென், ஆதிக்கமிகு நிக்கத் சரீன், இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர், மகளிர் கிரிக்கெட் அணியினர் உள்ளிட்ட, நாட்டுக்காகத் தங்களது முழு உழைப்பையும் அளித்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது பாராட்டுகள். இனி வருபவை யாவும் இதைவிடச் சிறப்பானவையாக மட்டுமே இருக்கும். தங்களது எதிர்கால முயற்சிகளில் வெற்றிபெற எனது வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். …

The post அனைத்து வீரர்களும் எதிர்காலத்தில் சிறந்து விளையாட வாழ்த்துக்கள்: காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Commonwealth ,G.K. ,Stalin ,Chennai ,G.K. Stalin ,Commonwealth Games Commonwealth Games ,England ,B.C. ,Dinakaran ,
× RELATED பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு,...