×

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் குப்பை தொட்டியில் துப்பாக்கி

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்றிரவு மெட்ரோ ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ராணி, நாகம்மாள் ஆகியோர் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள குப்பைதொட்டியில் கை துப்பாக்கி கிடந்தது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், குப்பை தொட்டியில் கிடந்த துப்பாக்கியை எடுத்து  புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை ஆயுத கிடங்குக்கு அனுப்பிவைத்தனர். அதை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அது, தீபாவளி மற்றும் சினிமா படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தும் பொம்மை துப்பாக்கி என்று தெரியவந்தது. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே குப்பை தொட்டியில் கிடந்த டம்மி துப்பாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் குப்பை தொட்டியில் துப்பாக்கி appeared first on Dinakaran.

Tags : Koyambedu metro station ,Annanagar ,Rani ,Nagammal ,Chennai Koyambedu ,Dinakaran ,
× RELATED நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு போலீஸ் சம்மன்