×

யாழ்ப்பாணத்தில் இருந்து குமரிக்கு வந்த தேசு விநாயகர்

குளச்சல் மேலத்தெருவில் உள்ள தேசு விநாயகர் கோயில் சிலை சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டதாகும். இந்த கோயிலை நிர்வகித்து நித்ய பூஜைகள் செய்ய மக்கள் முடிவு செய்தனர். இதற்காக சிறிது சொத்து வாங்க மேலத்தெரு செட்டு குல மக்கள் முடிவு செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து சில நூற்றாண்டுகளுக்கு பிறகு கோயிலை சற்று பெரிதாக எழுப்பி விநாயகரை தரையில் வைத்திட தீர்மானித்துள்ளனர். இந்த திருப்பணிக்கு வசதியாக விநாயகரை தற்காலிகமாக சற்று தள்ளிவைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அவர்களால் இயலவில்லையாம். பின்னர் ஆகம விதிப்படி அதனை அப்படியே வைத்துவிட்டனர். அதன் பிறகு சுற்றுச்சுவர் எழுப்பி பெரிதாக கோயிலை கட்டி தரைமட்டத்தையும் உயர்த்தி விட்டனர். பின்னர் பெரிய விநாயகரையும் பிரதிஷ்டை செய்தனர்.

தற்போது தரைமட்டத்தில் இருந்து சுமார் இரண்டரை அடி உயரத்தில் மகா மண்டபம் மற்றும் இரண்டரை அடி உயரத்தில் கருவறையும் அமைந்துள்ளது. இதற்கிடையே கோயிலில் ஒரு கட்டத்தில் அதிகாரப்போட்டி நடந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நித்ய பூஜைகள் விதிப்படி நடக்காமல் போய்விட்டதாகவும் தெரிகிறது. இதனால் ஊரில் உள்ளவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாகி விட்டார்களாம். இதை கேள்விப்பட்ட குளச்சலை சேர்ந்த, காசியை நிரந்தர வாசஸ்தலமாக கொண்ட காசிவாசியான சிவானந்த சுப்பிரமணியம் அனைவரையும் சந்தித்து சமாதானம் செய்தார்.

தொடர்ந்து 1900ல் ஒற்றுமையை உண்டாக்கினார்.பின்னர் அவரது முயற்சியாலும், ஊர் மக்களின் ஒத்துழைப்பாலும் தற்போதுள்ள பெரிய கோயிலை கட்டி, காசி விஸ்வநாதர், சிவகாமி அம்மன் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 76 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டு, மண் சிலைகளுக்கு பதிலாக கற்சிலைகளாக பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.   

Tags : Desu Ganayakar ,Kumari ,Jaffna ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...