×

கணவர் குடும்பத்தினர் அடித்து சித்ரவதை.! நியூயார்க்கில் சீக்கிய பெண் தூக்கில் தொங்கி தற்கொலை: வீடியோவில் மரண வாக்குமூலம்

புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த இந்திய பெண் மந்தீப் கவுர் (30) என்பவர், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ஆறு மற்றும் நான்கு வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மந்தீப் கவுர் ெவளியிட்ட வீடியோ பதிவில், ‘ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது; தினமும் அடிபடுவதை என்னால் தாங்க முடியவில்லை. எனது கணவர் மற்றும் மாமியார் என்னை தற்கொலைக்கு தூண்டினர். என் தந்தையே, நான் இறக்கப்போகிறேன்; தயவுசெய்து என்னை மன்னியுங்கள்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசத்தில் வசிக்கும் மந்தீப் கவுரின் பெற்றோர், தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், ‘எங்கள் மகளின் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகளின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதர அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post கணவர் குடும்பத்தினர் அடித்து சித்ரவதை.! நியூயார்க்கில் சீக்கிய பெண் தூக்கில் தொங்கி தற்கொலை: வீடியோவில் மரண வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Sitravatha ,New York ,New Delhi ,Mandeep Kaur ,New York, USA ,
× RELATED உலக கோப்பையில் விளையாட இந்திய அணி வீரர்கள் நியூயார்க் புறப்பட்டனர்