×

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு!: பயங்கர நிலச்சரிவால் சாலைகளில் பாறைகள், மண் சரிந்து போக்குவரத்து பாதிப்பு..!!

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பால் கொட்டிய கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சலில் காலை முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், 11 மணிக்கு பிறகு கனமழை கொட்டியது. மேகவெடிப்பால் குறுகிய நேரத்தில் பெய்த அதி கனமழையால் மலைக்கிராமங்கள் வெள்ள காடாகின. ஆங்காங்கே அருவிகள் போல வெள்ளம் கொட்டியதால் பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக காஞ்வா பகுதியில் சாலைகள், பாலங்கள் மூடப்பட்டன. கனமழை, வெள்ளப்பெருக்கால் இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மலையில் இருந்து பாறைகள் வேகமாக சரிந்து விழும் காட்சிகள் வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. மழை சற்று தணிந்துள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் பேரிடர் மேலாண் படையினர் ஈடுபட்டுள்ளனர். நெடுஞ்சாலைகளில் குவிந்து கிடக்கும் பாறைகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது….

The post இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு!: பயங்கர நிலச்சரிவால் சாலைகளில் பாறைகள், மண் சரிந்து போக்குவரத்து பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sudden cloudburst ,Himachal Pradesh ,Shimla ,Himachal ,Dinakaran ,
× RELATED கொடுத்த வாக்குறுதியை காங். நிறைவேற்றவில்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு