×

மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் ரூ.698 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் மாணவிகள் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெறும் வகையில் நடப்பாண்டுக்கு மட்டும்  ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் முழுவதுமாக ஆன்லைனில் மட்டும் செயல்படுத்தப்படும், இந்த திட்டத்தின் கண்காணிப்பாளராக சமூக நலத்துறையின் இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தை முறைப்படி செயல்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையிலும் மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் நிதி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மாணவிகள் கல்லூரி மேல் படிப்பை பயில்கின்றனரா என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயர்கல்வித்துறை சார்பாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. . …

The post மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் ரூ.698 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,Chennai ,Muvalur ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...