×

போலி பணி ஆணை வழங்கி ரூ.12 லட்சம் நூதன மோசடி; ரயில்வே ஊழியர் கைது

அம்பத்தூர்: வில்லிவாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சூரிய பிரதாபன் (36), பொறியியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவருடன் 12ம் வகுப்பு வரை படித்த அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (36),  ரயில்வேயில் வேலை செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் மணிமாறன்,  ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கித் தருவதாக, சூரிய பிரதாபனிடம் ரூ.12 லட்சத்தை பெற்றுள்ளார். இதையடுத்து மணிமாறன் பணி நியமன ஆணை, அடையாள அட்டையை வழங்கி, உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள கோண்டா என்ற இடத்தில் டிக்கெட் பரிசோதகர் வேலை கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.இதையடுத்து சூரிய பிரதாபன் அங்கு சென்று, ரயில் பெட்டியில் ஏறி பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த உண்மையான டிக்கெட் பரிசோதகர் சூரிய பிரதாபன் நடவடிக்கையை பார்த்து அங்குள்ள போலீசில் ஒப்படைத்தார். லக்னோ போலீசார் விசாரணையில் அது போலி ஆணை என்பது தெரிந்தது. இதையடுத்து, சூரிய பிரதாபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுபற்றி அறிந்த பிரதாபனின் தாயார் தில்லைவாணி நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐ.சி.எப் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று மணிமாறனை கைது செய்தனர்….

The post போலி பணி ஆணை வழங்கி ரூ.12 லட்சம் நூதன மோசடி; ரயில்வே ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Ambathur ,Surya Pratabhan ,Villiwakam Bajana Temple Street ,Dinakaran ,
× RELATED சென்னை அம்பத்தூரில் ஏசியில் ஏற்பட்ட...