×

ஸ்ரீ சுயம்பு திருவீதி மாரியம்மன் ஆலயத்தில் 9ம் ஆண்டு பால்குட ஊர்வலம்

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த திருமழிசை, மடவிளாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது  ஸ்ரீ சுயம்பு திருவீதி மாரியம்மன் ஆலயத்தில் 9 ம் ஆண்டு பால்குட அபிஷேகம் ஆடிதிருவிழா நேற்றுமுன்தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 4 ந் தேதி காலை திருவீதி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், பிறகு குமார மக்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், பதிவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் காலை யாகம் அபிஷேகமும், குண்டுமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ எட்டியாத்தம்மன் ஆலயத்திலிருந்து 500 க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர். பிறகு ஸ்ரீ சுயம்பு திருவீதி மாரியம்மன் ஆலயத்தில் பால் அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, திருமழிசை பேரூர் திமுக செயலாளர் தி.வே.முனுசாமி, ஆர்.ஏழுமலை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். …

The post ஸ்ரீ சுயம்பு திருவீதி மாரியம்மன் ஆலயத்தில் 9ம் ஆண்டு பால்குட ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Sri ,Swayambu ,Thiruveedi Mariamman Temple ,Tiruvallur ,Tirumazhisai ,Madavilakkam village ,Sri Suyambu ,Thiruveethi Mariamman Temple ,Sri Suyambu Thiruveethi Mariamman Temple ,
× RELATED துயர் தீர்ப்பார் திருத்தளிநாதர்