×

பாக்சிங்கில் பதக்கங்கள் உறுதி

காமன்வெல்த் ஆண்கள் குத்துச்சண்டை 51 கிலோ எடை பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அமித் பாங்கல் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் ஜாம்பியாவின் பேட்ரிக் சின்யெம்பாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். மகளிர் குத்துச்சண்டை (45- 48 கிலோ) குறைந்தபட்ச எடை பிரிவு அரையிறுதியில் இந்திய நட்சத்திரம் நீத்து கங்காஸின் ஆக்ரோஷமான குத்துகளை சமாளிக்க முடியாமல் கனடாவின் தில்லான் பிரியங்கா தடுமாறிய நிலையில், நடுவர் ஆட்டத்தை நிறுத்தி நீத்து வென்றதாக அறிவித்தார். மகளிர் லைட் பிளைவெயிட் (48-50 கிலோ) பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நிக்கத் ஜரீன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் இங்கிலாந்தின் சவன்னா அல்பியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். இதனால் பாக்சிங்கில் இந்தியாவுக்கு 3 தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கங்கள் உறுதியாகி உள்ளன….

The post பாக்சிங்கில் பதக்கங்கள் உறுதி appeared first on Dinakaran.

Tags : India ,Amit Pangal ,Commonwealth Men ,Weight Division ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!