×

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றது. இந்திய வீரர்கள் எல்தோஸ் பால் 17.03 மீ., அப்துல்லா அபுபக்கர் 17.02 மீ. தூரமும் ஈட்டி எறிந்துள்ளனர்72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 5-வது இடத்தியல் நீடிக்கிறது. 10-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்று குத்துச்சண்டையில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது, மேலும் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்று வரலாறு படைத்துள்ளது.இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் எல்டோஸ் பால் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றுள்ளார். இதே போட்டியில் இந்தியாவின் அப்துல்லா அபூபக்கர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். கடந்த முறையே தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்….

The post இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Commonwealth Triple Jump ,England ,London ,Dinakaran ,
× RELATED இந்திய அணி விளையாடிய விதம்...