×

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு: கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிப்பு..!!

சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.200 கோடி வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில், கடந்த 2ம் தேதி தொடங்கி 3 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, மதுரை, கோவை, வேலூர் என சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அச்சமயம் அன்புச்செழியன் வீட்டில் இருந்து சூட்கேஸ் மற்றும் பேக்குகளில் முக்கியமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அன்புச் செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் மதுரை பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோரின் இடங்களில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் அளித்தனர். அதில், கணக்கில் வராத ரூ.26 கோடி ரொக்கம், ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விநியோகஸ்தர்கள் மறைத்துள்ளனர் எனவும் அதிகாரிகள் கூறினர்….

The post சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு: கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Anbuchezhiyan ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...