×

ஏழைக்கு ஒரு நியாயம்… பணக்காரர்களுக்கு ஒரு நியாயம்; ‘சைபர் செல்’ செயல்படுகிறதா? இல்லையா?.. சமூகத்தின் மீது ஆபாச நடிகைக்கு திடீர் அக்கறை

மும்பை: நாட்டில் சைபர் செல் செயல்படுகிறதா? இல்லையா? என்று சமூகத்தின் மீது கவனத்தை செலுத்திய ஆபாச நடிகை உர்ஃபி ஜாவேத், திடீர் கேள்வி எழுப்பி உள்ளார். சமூக வலைதளங்களில் ஆபாச போட்டோ ஷூட் படங்களை வெளியிடும் நடிகையும், மாடல் அழகியுமான உர்ஃபி ஜாவேத், தனது பேஷனில் மூழ்கி இருப்பது மட்டுமல்லாமல் சமூகத்தில் உள்ள முக்கியமான பிரச்னை குறித்தும் தனது கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நாட்டில் சைபர் செல் என்பது இருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகம் வந்துள்ளது. மக்கள் தங்கள் புகார்களை அங்கு பதிவு செய்வதில்லை. மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை சைபர் செல் மற்றும் காவல்துறை அலட்சியப்படுத்துகிறது. அதனால் மக்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை. மறுபுறம், இணைய குற்றவாளிகள் ஆன்லைனில் மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களால் பெண்களுக்கு தொந்தரவு அதிகரித்துள்ளது. இதையெல்லாம் சைபர் செல்லோ, காவல்துறையோ கண்டுகொள்ளாதது ஏன்? கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மீரட்டில் மகளிர் ஆணையத்தின் தலைவி சுஷ்மா சிங்கின் மாமனார் அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். அந்தப் பெண் தலைவர் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே சில அரசியல் தலைவர்கள் அல்லது பணக்காரர்களுடன் தொடர்புடைய ஒருவருக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு நீதி கிடைக்க போராட வேண்டியுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்….

The post ஏழைக்கு ஒரு நியாயம்… பணக்காரர்களுக்கு ஒரு நியாயம்; ‘சைபர் செல்’ செயல்படுகிறதா? இல்லையா?.. சமூகத்தின் மீது ஆபாச நடிகைக்கு திடீர் அக்கறை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Urfi Javed ,Dinakaran ,
× RELATED ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு