×

காசி இல்லத்தில் பாரதியார் வெண்கல சிலை அமைக்க ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: காசியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தில் மார்பளவு வெண்கல சிலை அமைக்க ரூ.18 லட்சம் தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் மகேசன் காசிராஜன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: காசியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தில் உள்ள அறையை புனரமைத்து. அதில் அவருக்கு மார்பளவு வெண்கல சிலை அமைக்க ரூ.18 லட்சமும், அந்த அறைக்கு மாத வாடகை தொகை வழங்க நடப்பு நிதியாண்டிற்கு ரூ.67,500 என மொத்தம் ரூ.18 லட்சத்து 67 ஆயிரத்து 500 நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது. 2023-24ம் நிதியாண்டு முதல் தொடர் செலவினமாக ரூ.90 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்ய நிர்வாக அனுமதி வழங்கியும் அரசாணை வெளியிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post காசி இல்லத்தில் பாரதியார் வெண்கல சிலை அமைக்க ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bharathiar ,Kasi ,Tamil Nadu Govt. ,Chennai ,Tamil Nadu Government ,Ghasi ,
× RELATED எண்ணூரில் மதுபோதையில் காவலரை தாக்கிய...