×

பெண் கஞ்சா வியாபாரி உள்பட 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

சென்னை: வியாசர்பாடி பி.வி காலனி 2வது தெருவை சேர்ந்தவர் ரமா (எ) அறுப்பு ரமா (49). எம்கேபி நகர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா வியாபாரம் செய்துவந்த இவரை, சில தினங்களுக்கு முன், 16 கிலோ கஞ்சாவுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்மீது மேலும் பல கஞ்சா வழக்குகள் உள்ளளதால், அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். * வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 4வது தெருவை சேர்ந்த அருண்பாண்டி (22), அதே பகுதியை சேர்ந்த தொப்பை அசோக் (23), பல்லு ரவி (25) ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி எம்.கே.பி நகர் பகுதியில் வீடு புகுந்து குணசேகர் மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோரை கத்தியால் தாக்கினர். இது தொடர்பாக அருண்பாண்டி, தொப்பை அசோக், பல்லு ரவி, எம்.கே.பி. நகர் 17வது குறுக்கு தெருவை சேர்ந்த முரளிகிருஷ்ணன் (38) ஆகியோரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்….

The post பெண் கஞ்சா வியாபாரி உள்பட 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Guntas ,CHENNAI ,Rama (A) Aruppu Rama ,Vyasarpadi PV Colony 2nd Street ,MKP Nagar, Vyasarpadi ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை...