×

பனிமய மாதாவின் சொரூப பவனி இன்று நடைபெறுகிறது: தூத்துக்குடியில் இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை…

தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சப்பர பவனி நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் நாள்தோறும் சிறப்பு திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்று வருகின்றது. 9வது நாள் திருவிழாவையொட்டி நேற்று பனிமய மாத அன்னை சப்பரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் பேராலய வளாகத்தை சுற்றி வந்தது. இந்த விழாவை முன்னிட்டு பனிமய மாதா பேராலயம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 11ம்  நாள் திருவிழாவான இன்று காலை திருவிழா திருப்பலி, தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று மாலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பனிமய மாதா சொரூப பவனி நடைபெறுகிறது. இதற்காக, தூத்துக்குடியில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவிழாவையொட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருவிழாவில் தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலம் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் 440 ஆண்டு கால பழமை வாய்ந்த தூத்துக்குடி தூய பனிமய மாத பேராலயம் உலக பிரசித்தி பெற்றதாகும். கிறிஸ்துவ மக்கள் இன்றி இந்துக்கள், இஸ்லாமிய மக்களும் திரளாக கலந்து கொள்வதால் இந்த விழா மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.                                      …

The post பனிமய மாதாவின் சொரூப பவனி இன்று நடைபெறுகிறது: தூத்துக்குடியில் இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை… appeared first on Dinakaran.

Tags : Sarupa Bhavani ,Panimaya Mata ,Thoothukudi… ,Thoothukudi ,Sappara Bhavani ,Thoothukudi Panimaya Mata Temple festival ,Soroopa Bhavani ,
× RELATED மீளவிட்டான் சாலை விரிவாக்கப் பணி