×

திருச்சி அருகே 400 ஆண்டுகள் பழமையான சேதுபதி அரசரின் வம்சத்தை சேர்ந்த பெண் தெய்வசிலையை பறிமுதல்: 4 பேர் கைது

திருச்சி: சேதுபதி அரசரின் வம்சத்தை சேர்ந்த 400 ஆண்டுகள் பழமையான பெண் தெய்வசிலையை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 400 ஆண்டுகள் பழமையான சேதுபதி அரசு வம்சத்தை சேர்ந்த ஐம்பொன் பெண் சிலை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகராஜ் மற்றும் குமாரவேல் என்ற இருவரிடம் இருப்பதாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சிலையை வாங்குவது போல போலீசார் அவ்விருவரிடமும் பேசியுள்ளனர். சுமார் 1 வார முயற்சியின் பலனாக, இருவரும் போலீசாரை சிலை வாங்குவோர் என நினைத்து, அவர்களிடம் கூடுதல் தகவலை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் திருச்சியை சேர்ந்த முஸ்தபா என்ற நபரிடம் சிலை இருப்பதாக தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, சிலை கடத்தல் போலீசார், கடத்தப்பட்ட பெண் சிலைக்கு ரூ.2.30 கோடி விலை பேசிய நிலையில், சிலையை கொடுக்க கடத்தல்காரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னர், பழைய திருச்சி ரோடு அருகே முஸ்தபா சிலையுடன் வரும்பொழுது, சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சிலை குறித்து, தொல்லியல்துறையிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இது சேதுபதி அரச வம்சத்தை சேர்ந்த பெண் சிலை என்பதும், ஐம்பொன்களால் ஆன சிலை எனவும் தெரியவந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, கடத்தல் பின்னணியில் யார்யார் உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post திருச்சி அருகே 400 ஆண்டுகள் பழமையான சேதுபதி அரசரின் வம்சத்தை சேர்ந்த பெண் தெய்வசிலையை பறிமுதல்: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : King Sethupati ,Trichy ,Anti-Smuggling Unit ,Dinakaran ,
× RELATED திருச்சியில் சோகம் கொள்ளிடம் தடுப்பணையில் குளித்த மாணவன் பலி