×

விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் அருகே பாலத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கச்சாவடியினை அடுத்து  விழுப்புரம் மாவட்டத்தில், ஓங்கூர் அருகே பழுதடைந்த  பாலத்தை  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை  அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை- திருச்சி சாலையில், ஆத்தூர் சுங்கச்சாவடியினை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில்,  ஓங்கூர் அருகே பழுதடைந்த  பாலத்தில் இடதுபுற சாலையில் அமைந்துள்ள பழைய பாலம் 13.080 மீட்டர் அகலமுள்ள 4 கண்கள் கொண்டதாகும். இந்த பழைய பாலத்தின் ஓடுதளம் 8.50 மீட்டர் அகலம் கொண்ட 3 டி-தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது. வலது புறம் ஓரத்தில் உள்ள டி-தூண் இடம் பெயர்ந்ததன் காரணமாக அதிக வாகன எடையினால், பியர் கப்-க்கு அதிர்வு ஏற்பட்டு இதன் கீழுள்ள தாங்கு தகடு சேதமடைந்து சீரற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து முழுவதும் வலப்புறம் அருகில் உள்ள புதிய பாலத்தில் கடந்த 28ம் தேதி முதல் திருப்பிவிடப்பட்டு, பழைய பாலத்தில் பழுதுபார்க்கும் பணிகள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக நடைபெற்று வருகிறது.  இப்பணி வருகிற 10ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட எஸ்பி. நாதா, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் சைதன்யா, நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர்கள் பாலமுருகன், சந்திரசேகர்  மற்றும் கோட்டப் பொறியாளர் ஆகியோர் உடனிருந்தனர்….

The post விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் அருகே பாலத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Tags : Ongur ,Villupuram district ,Minister AV Velu ,CHENNAI ,Attur ,Chennai-Trichy National Highway ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு...