×

வேல் வழிபாடு வேதனை தீர்க்கும்

‘ஆறும், முருகனும்!

ஆறு தலை தருபவன் ‘ஆறு’ - ‘தலை’ கொண்ட முருகன் கங்கையில் தாமரையில் இருந்ததால் காங்கேயன் ஆறுபெண்கள் (கார்த்திகை பெண்கள்) வளர்த்ததால் கார்த்திகேயன், ஆறு நட்சத்திரங்கள் = கார்த்திகையானது திதியில் ஆறாவது சஷ்டி. இவருக்கு ஆறுமுகம், முருகன் சடாட்சரம், ‘சரவணபவ’, காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சரியம் என்ற ஆறு பகைவர்களை அழித்து ஞானம் அருளும் அறுபடை வீரர் அவரே! சங்கப் புலவராக இருந்த முருகன், ஞானசம்பந்தனாக இப்பூவுலகில் அவதரித்தார் என்பது உண்மை! நான் யார்? ‘நான்மறை சம்பந்தன்!’ என அவனே பதில் தந்தது அருமை.

சிறுவாபுரி

சின்ன + அம்பு + பேடு = சின்னம்பேடு. சிறுவர் + அம்பு + எடு = என்பதே சின்னம்பேடானது. ராமாயண காலத்தில் குசலபுரி பின்ன சிறுவாபுரி. சிறுவர்களான லவனும் குசனும் ராஜ சூயஸாக  குதிரையைக் கட்டி வைத்து, இத்தல முருகனை தரிசித்து ராமரை வென்று, இவ்வூரை ஜெயநகரானது. திருச்செந்தூரில் ஜெயந்திநாதன், செந்தில்நாதர், செந்தூர் முருகனானார். இங்கு சிறுவாபுரியில் வள்ளியோடு திருமணக்கோல முருகனை தரிசிப்பது விசேஷம்.

மாம்பழ முருகன்

சேலத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அம்மா பேட்டை அருகில் உள்ளது குமரகிரி தண்டாயுதபாணி கோவில். கருப்பண்ண சுவாமி என்னும் தவமுனிவர் அவருடைய கனவில் தோன்றிய முருகன் தன் திருப்பாதம் மலையில் எங்கே பதித்து உள்ளதோ அங்கே ஆலயம் எழுப்பப் பணித்தார் என்று கூறப்படுகிறது. இங்கே முருகன் பாலதண்டாயுதபாணியாக இருக்கிறார். உற்சவர் வள்ளி தேவசேனையுடன் விளங்குகிறார். விநாயகர், துர்க்கை, சாய்ரா ஆகியோர் உள்ளனர். இத்தலத்தில் கையில் தண்டத்துடன் குபேர திசையை அதாவது வடக்குத் திசையை நோக்கியபடி தண்டாயுதபாணி அருளுகிறார்.

நாரதர் கொடுத்த மாங்கனியைத் தனக்கே தர வேண்டுமெனக் கேட்டு பெற்றோரிடம் கோபித்த முருகன் மயில் மீது ஏறி பழனி சென்றார். தண்டாயுதபாணியாகச் சென்ற அவர் வழியில் குமரகிரி என அழைக்கப்பெறும் குன்றில் சிறிது நேரம் தங்கி விட்டுச் சென்றார். பழனிக்குச் சென்ற பக்தர் கருப்பண்ண சுவாமி இக்குன்றில் சற்று நேரம் இளைப்பாறிய போதுதான் நாம் மேலே குறிப்பிட்ட நிகழ்வு நடைபெற்றது. பழனியில் அடியார் வேடத்தில் வந்து தோன்றிய முருகன், பக்தரிடம் திருவோட்டைக் கொடுத்து அசரீரி ஒலித்த இடத்தில் கோயில் அமைக்கக் கூறினார். அத்திருவோட்டில் கிடைத்த பணத்தைக் கொண்டு இப்பீடத்தில் கோயில் அமைத்தார்.

மாம்பழத்திற்காக கோபம் கொண்டு சென்ற கந்த முருகப் பெருமான் தங்கிய இடமாதலால் இங்கு மாம்பழம் நைவேத்தியம் படைத்து வணங்குகின்றனர். இவ்வாறு வேண்டுவதால் முருகன் நாம் வேண்டுவதை தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இம்முருகனின் அருளாலேதான் சேலம் பகுதி மாம்பழ விளைச்சலில் சிறந்தோங்குவதாக நம்பிக்கை. எனவே அடியவர்கள் குமரகிரி தண்டாயுதபாணியை மாம்பழ முருகன் என அழைக்கின்றனர். தண்டாயுதபாணிக்கு மாம்பழம் படைத்து வணங்கிட புத்திரபாக்கியம் கிட்டும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என நம்பிக்கை. இவரை வணங்கிடச் செல்வம் செழிக்கும், படி பூஜை செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை.

Tags : Vale ,
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்