விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மரணத்தையடுத்து நடந்த கலவரத்தில் கைதானவர்களில் 148 பேர் ஜாமீன் கோரி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர், கலவரத்தை வேடிக்கை பார்க்க சென்றவர்கள்தான் இவர்கள், எனவே எதிர்காலம் கருதி ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். அரசு தரப்பு வழக்கறிஞர், இவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது, வீடியோ ஆதாரங்களை பின்பற்றியே கைது செய்யப்பட்டனர். எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பூர்ணிமா, விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்….
The post கலவர வழக்கில் கைது 148 பேர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.