×

கச்சநத்தம் படுகொலை வழக்கில் தண்டனை விபரம் ஒத்திவைப்பு

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (65), சண்முகநாதன் (31), சந்திரசேகர் (34) ஆகிய 3 பேர், கடந்த 2018ல் வெட்டி கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் திருப்பாச்சேத்தி ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 3 பேர் சிறார், மற்றும் 2 பேர் இறந்தனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார். மீதம் உள்ள 27 பேர் மீதான வழக்கு சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் கடந்த 1ம் தேதி 27 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனை விவரம் 3ம் தேதி (நேற்று) தெரிவிக்கப்படும் என அறிவித்தது. அதன்படி நேற்று தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், தண்டனை விபரம் நாளை (5ம் தேதி) அறிவிக்கப்படும் எனக் கூறி மீண்டும் ஒத்தி வைத்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக வீடியோ கான்பரன்சிங் மூலம் தீர்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்பி செந்தில்குமார், நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்….

The post கச்சநத்தம் படுகொலை வழக்கில் தண்டனை விபரம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Kachanantham ,Sivagangai ,Arumugam ,Shanmuganathan ,Chandrasekhar ,Thiruppachetty ,Sivagangai district ,Tiruppuvanam taluk ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்