×

கணவரின் ஜிஎஸ்டி எண் பகிர்வு கோவா மதுபார் சர்ச்சை ஸ்மிருதிக்கு புதிய சிக்கல்

பனாஜி: ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கணவருக்கு சொந்தமான நிறுவனத்தின் ஜிஎஸ்டி எண், கோவா மதுபான விடுதியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள், கோவாவில் சட்ட விரோதமாக மதுபான விடுதி நடத்தி வருவதாக சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஸ்மிருதி இரானி, இந்த செய்தியை வெளியிட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ‘காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு பொய்யானது, அது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட டிவிட்டர் பதிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்,’ என உத்தரவிட்டது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் செயலாளர் கிரிஷ் சோதன்கார், ‘ஸ்மிருதி இரானியின் கணவருக்கு சொந்தமான நிறுவனத்தின் முகவரியில் இருந்துதான் கோவா மதுபான விடுதி இயங்குகிறது. அவருடைய ஜிஎஸ்டி எண், கோவா மதுபான விடுதியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது,’ என்றும் குற்றம்சாட்டி உள்ளார். இதனால், ஸ்மிருதிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஆனால், பாஜ தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். …

The post கணவரின் ஜிஎஸ்டி எண் பகிர்வு கோவா மதுபார் சர்ச்சை ஸ்மிருதிக்கு புதிய சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Goa ,Smruti ,Panaji ,Union Minister ,Smriti Rani ,Goa Liquor Inn ,Madhubar ,Smriti ,Dinakaran ,
× RELATED கோவை மருதமலை கோயிலுக்கு காரில் செல்ல...