×

அனைத்து வீரர்களுடன் இந்திய அணி சிட்னி பயணம்

மெல்போர்ன்: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மெல்போர்னில் ஒரு உணவகத்துக்கு சென்ற ரோகித், கில், பன்ட், பிரித்வி, சைனி ஆகியோர் விதிமுறைகளை மீறி உள்ளரங்குக்கு சென்று சாப்பிட்டதுடன் ரசிகர் ஒருவருடன் கை குலுக்கி செல்பி எடுத்துக்கொண்டதாகவும், வீரர்களுக்கான உணவுக் கட்டணத்தை அந்த ரசிகரே செலுத்தியதாகவும் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து ரோகித் உட்பட 5 வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டதுடன் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஜன. 7ம் தேதி தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று தனி விமானத்தில் சிட்னி புறப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட வீரர்களும் மற்ற வீரர்களுடன் இணைந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் குவாரன்டைன் விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள இந்திய அணி, பிரிஸ்பேனில் 15ம் தேதி தொடங்க உள்ள 4வது டெஸ்டில் விளையாடத் தயங்குவதாக தகவல் வெளியானது. இதனால் கடைசி டெஸ்ட் போட்டியும் சிட்னிக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஆஸி. கிரிக்கெட் வாரியம் அதை மறுத்துள்ளது….

The post அனைத்து வீரர்களுடன் இந்திய அணி சிட்னி பயணம் appeared first on Dinakaran.

Tags : Sydney ,Melbourne ,Rochith ,Gill ,Bant ,Prithvi ,Saini ,Dinakaran ,
× RELATED இந்திய பயிற்சியாளர் வாய்ப்பை நிராகரித்தேன்: ரிக்கி பாண்டிங்