×

கீழடி அருகே அகரத்தில் 6 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு

திருப்புவனம்: கீழடி அருகே அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் 6 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடி மட்டுமின்றி, அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடந்து வருகிறது. அகரத்தில் 6 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடக்கிறது. இங்கு பழங்கால பானை ஓடுகள், சில்லுகள், பாசிமணிகள் கிடைத்து வருகின்றன.இங்குள்ள குழி ஒன்றில் சில நாட்களுக்குமுன் உறை கிணற்றின் வாய்ப்பகுதி மட்டும் தென்பட்டது. அங்கு தொடர்ந்து தோண்டும் பணி நடந்து வந்த நிலையில், தற்போது ஆறடுக்கு உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. அகரத்தில் கடந்த ஆண்டு நடந்த அகழாய்வில் 33 அடுக்குகள் கொண்ட மெகா உறை கிணறு கண்டறியப்பட்டது. தமிழக தொல்லியல் ஆய்வில் 33 அடுக்குகள் கொண்ட உறை கிணறு அகரத்தில்தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது….

The post கீழடி அருகே அகரத்தில் 6 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Agarat ,Keezadi ,Tiruppuvanam ,Sivagangai district ,Geezadi ,
× RELATED மதுரை அருகே ‘மற்றொரு கீழடி’ 2,500 ஆண்டு...