×

மாணவியை தூக்கி செல்லும் வீடியோவில் மர்மம்: ஸ்ரீமதியின் தாய் செல்வி பரபரப்பு பேட்டி

சின்னசேலம்: சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் விழுந்து கிடக்கும் மாணவியை தூக்கிச்செல்லும் வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதில் பல மர்மங்கள் உள்ளதாகவும், திட்டமிட்டு இதுபோன்ற வீடியோக்களை பரப்பி வருவது யார்? என காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும் என மாணவியின் தாயார் கூறி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி கடந்த ஜுலை மாதம் 13ம்தேதி அதிகாலை இறந்து கிடந்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் முதல் சமூக வலைதளங்களில் கடந்த 13.7.22 அன்று காலை 5.23 மணிக்கு மாணவி விழுந்து கிடப்பது போலவும், அதை ஆசிரியர்கள், வாட்ச்மேன் ஆகியோர் 5.24 மணிக்கு தூக்கி வருவது போலவும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே இந்த வீடியோ வெளியானது பற்றி பெரியநெசலூரில் வசிக்கும் மாணவியின் தாயார் செல்வியிடம் தொலைபேசியில் செய்தியாளர்கள் கேட்டபோது, மாணவி விழுந்து கிடக்கும் வீடியோ எதிர் திசையில் எடுக்கப்பட்டுள்ளது.அவரை தூக்கிச்செல்வதாக வீடியோ வெளியான நிலையில் அவர் எப்படி விழுந்தார் என வீடியோவில் பதிவாகாதது ஏன்? இதில் பல மர்மங்கள் உள்ளன. இது போன்ற வீடியோக்களை திட்டமிட்டு வெளியிடுவது யார்? எனவும் காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்….

The post மாணவியை தூக்கி செல்லும் வீடியோவில் மர்மம்: ஸ்ரீமதியின் தாய் செல்வி பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Smt. ,Chinnasalem ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...