×

குடியாத்தம்-பள்ளிகொண்டா சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

வேலூர்: குடியாத்தம்-பள்ளிகொண்டா சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றப்பட்டது. இதுதொடர்பாக வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குடியாத்தம் மற்றும் பள்ளிகொண்டா இடையிலான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள், மாணவர்கள், நோயாளிகள் என பலதரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மேற்கண்ட வழிதடத்தில் அடிக்கடி சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன.இதனை தவிர்க்க ஆந்திர மாநிலத்திலிருந்து சயனகுண்டா, பரதராமி வழியாக திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மார்க்கமாக இயக்கப்படும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அதிகனரக சரக்கு வாகனங்கள் பரதராமியிலிருந்து உமராபாத்-ஆம்பூர் வழியாக செல்ல வேண்டும்.கிருஷ்ணகிரியில்  இருந்து வரும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அதிகனரக சரக்கு வாகனங்கள் உமராபாத்-ஆம்பூர் வழியாக ஆந்திர மாநிலம் செல்ல வேண்டும். அதேபோல் திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் பலமநேர், மற்றும் பெங்களூரு, மும்பை செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அதிகனரக சரக்கு வாகனங்கள் வேலூர் வழியாக ஆந்திர மாநிலம் செல்ல வேண்டும். இப்போக்குவரத்து மாற்றங்கள் இன்று 4.08.2022 முதல் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது….

The post குடியாத்தம்-பள்ளிகொண்டா சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : -Palligonda road ,Vellore ,Citizen-Palligonda Road ,Collector ,Kumaravelbandian ,settlement-Palliconda road ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...