×

மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்வு கேரளா, டெல்லியில் மேலும் 2 பேருக்கு குரங்கம்மை உறுதி: தடுப்பூசி தயாரிக்க சீரம் ஆராய்ச்சி

புதுடெல்லி: கேரளா, டெல்லியில் நேற்று மேலும் 2 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதியானதால், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்ட குரங்கம்மை நோய், இந்தியாவுக்கும் சமீபத்தில் வந்தது.  கேரளாவில் முதல் நோயாளி கண்டறியப்பட்டார். அவர் வெளிநாட்டில் இருந்து வந்தார். இதைத் தொடர்ந்து இதே மாநிலத்தில் பலர் பாதித்துள்ளனர். இந்த நோய் பாதித்த வாலிபர் சில தினங்களுக்கு முன் இறந்தார். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கும், டெல்லிக்கும் வந்த மேலும் 2 பேருக்கு நேற்று இந்த நோய் உறுதியானது. இதன்மூலம், நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக  உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிய சுகாதாரத்  துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா நேற்று வலியுறுத்தினார். மேலும், இந்நோய் பரவலை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை குழுவையும் அமைத்துள்ளார். இந்நிலையில், இந்த நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் தனது நிறுவனம் ஈடுபட்டு இருப்பதாக மாண்டவியாவை நேற்று டெல்லியில் சந்தித்து பேசிய சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் புனேவாலா தெரிவித்துள்ளார்….

The post மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்வு கேரளா, டெல்லியில் மேலும் 2 பேருக்கு குரங்கம்மை உறுதி: தடுப்பூசி தயாரிக்க சீரம் ஆராய்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kerala, Delhi ,New Delhi ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு