×

காமன்வெல்த் விளையாட்டு திருவிழா 2022: இந்தியா இன்று…

* பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இன்று பேட்மின்டன், மகளிர் டி20, ஹாக்கி, ஸ்குவாஷ் போட்டிகளில் பங்கேற்கிறது.* பிற்பகல் 2.30க்கு தொடங்கும் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பைனலில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தங்க வேட்டையாடுகிறார். ஆகர்ஷி, லக்‌ஷியா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோரும் பதக்க நம்பிக்கையுடன் களமிறங்குகின்றனர்.* மகளிர் டி20ல் இந்தியா – பார்படாஸ் மோதும் ஆட்டம் இரவு 10.30க்கு தொடங்குகிறது.* ஹாக்கியில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்திய மகளிர் அணியும் மாலை 6.30க்கு தொடங்கும் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும் கனடா அணிகளின் சவாலை சந்திக்கின்றன. * பிற்பகல் 1.30க்கு தொடங்கும் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டங்களின் இந்தியாவின் சவுரவ் கோஷல் – தீபிகா பாலிகல், ரமித் டாண்டன் – ஜோஷ்னா சின்னப்ப ஜோடிகள் விளையாட உள்ளன.* ஹர்ஜிந்தருக்கு வெண்கலம்மகளிர் பளுதூக்குதல் 71 கிலோ எடை பிரிவில் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர்.* விகாசுக்கு வெள்ளிஆண்கள் பளுதூக்குதல் 96 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் விகாஸ் தாகூர் மொத்தம் 346 கிலோ எடை தூக்கி (155 கி. + 191 கி.) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.* லான் பவுல் போட்டியில் தங்கம்: இந்திய மகளிர் வரலாற்று சாதனைபர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் மகளிர் லான் பவுல் நால்வர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்து அசத்தியது. பரபரப்பான இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவுடன் நேற்று மோதிய லவ்லி சவுபே, பிங்க்கி, நயன்மோனி, ரூபா ராணி ஆகியோரடங்கிய இந்திய அணி 17-10 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று லான் பவுல் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது.பதக்க பட்டியல் டாப் 10 ரேங்க்    அணி    தங்கம்    வெள்ளி    வெண்கலம்    மொத்தம்1    ஆஸ்திரேலியா    32    21    21    742    இங்கிலாந்து    23    25    12    603    நியூசிலாந்து    13    7    5    254    கனடா    7    11    17    355    தென் ஆப்ரிக்கா    5    4    4    136    இந்தியா    5    4    3    127    ஸ்காட்லாந்து    2    8    14    248    வேல்ஸ்    2    2    7    119    மலேசியா    2    2    2    610    நைஜீரியா    2    1    2    5…

The post காமன்வெல்த் விளையாட்டு திருவிழா 2022: இந்தியா இன்று… appeared first on Dinakaran.

Tags : Commonwealth Games 2022 ,India ,Women's T20 ,Birmingham Commonwealth Games ,Commonwealth Games Festival 2022 ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...