×

சமூக வலைதளங்களில் மின்கட்டணம் குறித்து தவறான தகவல்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: மின்கட்டணம், மின்விநியோகம் தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பிறகு அவர் அளித்த பேட்டி: சமூக வலைதளங்களில் சில பதிவுகள் மோசமாக இருக்கிறது. அதிமுக நிர்வாகி ஒருவர் தொடர்ந்து ஒரு மாதகாலமாக சமூக வலைதளத்தில் மின்னகத்திற்கு தொடர்பு கொண்டேன் என்று கூறி வந்தார். அதற்கு நான் உங்களது செல்போன் எண் கொடுங்கள் என்று கூறினேன். அவர் தரவில்லை, சர்வீஸ் எண் மட்டும் கொடுத்தார். அதை ஆய்வு செய்ததில் அவர் தொடர்பு கொள்ளவில்லை என்பது 2 முறை தான் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது காரணம் குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இல்லாத கட்டணத்தை இருப்பதாகவும், அதேபோல் விநியோகத்தில் பாதிப்பு இல்லாத இடங்களில் பாதிப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள். இவ்வாறு கூறியவர் மீது மின்வாரியத்தில் இருந்து புகார் அளிக்க கூறியுள்ளோம். தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். வீடுகளுக்கான நிலை கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post சமூக வலைதளங்களில் மின்கட்டணம் குறித்து தவறான தகவல்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthilfalaji ,Chennai ,Power Minister ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...