சம்பா ரவை வெல்ல பாயசம்

தேவையான பொருட்கள்.

சம்பா ரவை - ஒரு கப்

துருவிய வெல்லம் - ஒரு கப்

நெய் - 3 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி - தலா கால் டீஸ்பூன்

முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப.

செய்முறை.

2 டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுக்கவும்.  வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சம்பா ரவையை ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு வறுத்து, 2 கப் நீர் விட்டு வேகவிடவும். ரவை வெந்ததும், வெல்லக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது, ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால்… தேங்காய்ப் பால், அல்லது வெறும் பால் சேர்க்கலாம். மண(ய)க்கும் பாயசம் தயார்.

Related Stories:

More
>