×

விளம்பர பணம் தராத விவகாரம்; இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் அலுவலக பொருட்கள் ஜப்தி: போலீஸ் உதவி கோரி சிவில் கோர்ட்டில் மனு

சென்னை: சட்டப் படி குற்றம் படத்துக்கான விளம்பர செலவு 76 ஆயிரம் ரூபாயை வழங்காததை அடுத்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய காவல் துறை உதவி கோரப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து, கடந்த 2011ம் ஆண்டு வெளியான சட்டப்படி குற்றம் திரைபடத்தின் விளம்பர செலவு 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்கவில்லை என்று விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் என்பவர் சென்னை அல்லிகுளம் 25வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணத்தை செலுத்துமாறு எஸ்.ஏ.சந்திரசேகருக்கு உத்தரவிட்டது. ஆனால், அந்த தொகையை வழங்காததால் உத்தரவை அமல்படுத்தக் கோரி சரவணன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், சந்திரசேகருக்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் உள்ள ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.  அதன் அடிப்படையில் நீதிமன்ற பணியாளர்கள், பொருட்களை ஜப்தி செய்ய சென்ற போது, சந்திரசேகரின் அலுவலக பணியாளர்கள் ஜப்தி செய்யவிடவில்லை. இதையடுத்து, காவல் துறை உதவி கேட்டு உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

The post விளம்பர பணம் தராத விவகாரம்; இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் அலுவலக பொருட்கள் ஜப்தி: போலீஸ் உதவி கோரி சிவில் கோர்ட்டில் மனு appeared first on Dinakaran.

Tags : SA Chandrasekhar ,Chennai ,S.A.Chandrasekhar ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...