×

மாணவி ஸ்ரீமதி மர்மச் சாவு வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்க அரசு வக்கீல் எதிர்ப்பு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13ம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர். இதனிடையே 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.  இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சாந்தி (பொ) முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வரும் 10ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி நேற்று விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி தனது தரப்பு வழக்கறிஞர் காசி விசுவநாதன் மூலம் மகளிர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.கலவர வழக்கில் கைதான 5 பேரிடம் காவலில் விசாரணை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த கலவர வழக்கில் கைதான  5 பேரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கள்ளக்குறிச்சி 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களை ஒருநாள் மட்டும் காவலில் விசாரிக்க நீதிபதி முகமது அலி நேற்று அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை போலீசார் உள்ளிட்டவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர்….

The post மாணவி ஸ்ரீமதி மர்மச் சாவு வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்க அரசு வக்கீல் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Government ,Srimati Marmach Sawu ,Viluppuram ,Srimathi ,Ganiyamur Private School ,Chinnaselam, Kallakkirichi district ,Dinakaran ,Srimati Marmakhavu ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!