×

மஞ்சள் பூசணி பொங்கல்

தேவையானவை

பச்சரிசி - 1/4 கப்
மஞ்சள் பூசணி துருவல் - 1/4 கப்
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
தேன் - 1/2 கப்
நெய் - 1 ஸ்பூன்
உலர்திராட்சை - 5
முந்திரி - 5
பாதாம் - 5

செய்முறை:

பானையில் 2 கப் தண்ணீர் சேர்த்து பச்சரிசியை போடவும். இத்துடன்  மஞ்சள் பூசணி துருவல் சேர்த்து வேகவிடவும். அரிசி மிருதுவாக வெந்து வரும் போது தேனை சேர்த்து நன்கு கலந்து வேக விடவும். வாணலியில் நெய் சூடானதும் உலர் திராட்சை, முந்திரி, பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பொரித்து, பொங்கலில் சேர்க்கவும். மஞ்சள் பூசணி பொங்கல் ரெடி.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி