×

திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் மார்கழி பெளர்ணமி: விரத வழிபாடு மற்றும் பலன்கள்

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி வருவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு பெளர்ணமியும் ஒரு குறிப்பிட்ட தனி சிறப்புக்கள் உள்ளன. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி மிக சிறப்பு வாய்ந்ததாக உள்ளன. அப்படி மார்கழி மாத பெளர்ணமி தினத்தில் விரத வழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

பௌர்ணமி விரதம்

ஒவ்வொரு பௌர்ணமி தினமும் அம்பிகை வழிபாட்டிற்கு ஏற்றதாக பார்க்கப்படுகின்றது. அதே சமயம் ஒவ்வொரு பௌர்ணமியும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அம்பிகைக்கு விரதமிருந்து வழிபடும் முறையும் உள்ளது. அப்படி உபவாசம் இருந்து அம்மனை வழிபட அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வழிபாடு முறை

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது வழக்கம். நடராஜரை வழிபடும் நாளாகவும், பெண்கள் தங்கள் கணவனுக்கு நல்ல ஆயுள் கிடைக்க வேண்டும் என விரதம் இருக்கும் உன்னதமான நாள். திருமணம் ஆகாதவர்கள் விரதம் இருந்து நடராஜர், அம்பாளை வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமிக்குத் திருமணம் ஆகாத ஆண், பெண்கள் விரதம் இருக்கலாம். திருமணமான பெண்களும் விரதம் இருக்கலாம். அல்லது குடும்பத்துடன் விரதம் இருந்து நடராஜரை வழிபடலாம். ஆனால் திருமணமான ஆண்களுக்கான விரதம் இருப்பதற்கான சரியான நாள் இது இல்லை.

என்ன செய்ய வேண்டும்?

நல்ல கணவன் கிடைக்க வேண்டும், கணவன் தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும் என விரதம் தொடங்க நினைக்கும் பெண்கள் காலையில், பல் துலக்கி, முகம், கை கால் கழுவி பின்னர், சுவாமி முன் மஞ்சள்,சீகக்காய், நல்லெண்ணெய் வைத்து வணங்க வேண்டும். அதன் பின்னர் எண்ணெய் தேய்த்து சீகக்காய் வைத்து குளிக்க, மஞ்சள் தேய்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் இப்படி குளிப்பது நல்லது. குளித்த பின் இறைவனை வழிபட தீபம் ஏற்றி வழிபட்டு, திருமணமான பெண்கள் மஞ்சள் சரடு மாற்ற வேண்டும். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறை நோன்பு கயிறாகக் கட்டிக் கொள்ளலாம். மஞ்சள் சரடு மாற்ற இந்த நாள் இப்படி இருக்கே என பார்க்க வேண்டாம். இந்த நாளில் ராகு காலம், எமகண்டம், குளிகை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் திருவாதிரை நட்சத்திரம் உள்ள தினம் முழுவதும் மாற்றிக்கொள்ளலாம். திருமணமான பெண்கள் இந்த திருவாதிரை நோன்பு எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது.

பலன்கள்

மார்கழி பெளர்ணமி விரத வழிபாடு செய்வதன் மூலம் அம்பிகையின் பூரண பலன்கள் பெறலாம். உங்களின் கஷ்டங்கள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும். நோய்கள், குறைபாடுகள் நீங்கும். எந்த செயலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பெளர்ணமியில் விரதம் இருந்து அம்பிகையை வழிபடுதலும், திருவாதிரை நட்சத்திரத்தில் மிக முக்கிய விசேஷமான நடராஜருக்கு அபிஷேகம் செய்யக்கூடிய ஆருத்ரா தரிசனம் செய்வதன் மூலம் எல்லா வித செளபாக்கியங்களும் கிடைக்கும்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?