×

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் ரெய்டு: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010ம் ஆண்டு  ‘யங் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகனான ராகுல் காந்தியும் உள்ளனர். நிறுவனங்கள் மாற்றப்பட்ட விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை தனியாக சோனியா, ராகுல் உட்பட சிலர் மீது பண மோசடி தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன காா்கே, பவன் குமார் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் இன்று ெடல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேநேரம், நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாகவும், சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது….

The post நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் ரெய்டு: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : National Herald Institute ,New Delhi ,National Herald ,Delhi ,National Herald'… ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு