×

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தருவதாக கூறும் மாற்று இடத்தை ஏற்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தருவதாக கூறும் மாற்று இடத்தை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் அருகே 31.37 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 35 ஆண்டுகால சாஸ்த்ரா பல்கலை கலக்கம் நடைபெறுவதாகவும், அந்த நிலத்தை மீண்டும் அரசுக்கு ஒப்படைக்க வேண்டும் என தாசில்தார் அலுவலகத்தில் இருந்து நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து சென்னை  உயர்நீதிமன்றத்தில் சாஸ்திரா பல்கலைக்கழகம் தரப்பில் வ்ளாக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு நிலத்தை 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்துள்ளதாகவும், கட்டிடம் எழுப்பிவிட்டு தற்போது மாற்று இடம் தருவதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும், அந்த இடத்தை காலி செய்ய உத்தரவிடவேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அப்போது சாஸ்த்ரா பல்கலைகழக தரப்பில் இருந்து தாங்கள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்திற்கு பதிலாக தங்களுக்கு சொந்தமான அருகில் உள்ள மாற்று இடத்தை வழங்க தயாரா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பகா மே மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சாஸ்த்ரா பல்கலைக்கழக கடிதத்திற்கு 3 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மாற்றுஇடத்தை ஏற்கமுடியாது என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருப்பதால் இது தொடர்பான விரிவான விளக்கமளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். …

The post தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தருவதாக கூறும் மாற்று இடத்தை ஏற்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur Chastra University ,Government ,Chennai ,Tamil Nadu Government ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...