×

நினைத்ததை நிறைவேற்றும் புரவசேரி பெருமாள்

குமரி மாவட்டம், நாகர்கோவில், ஒழுகினசேரியை அடுத்து உள்ளது புரவசேரி கிராமம். இங்கு சிறப்பு வாய்ந்த பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் பெருமாள் ஆவார். நின்ற கோலத்தில் நான்கு கைகள், சங்கு சங்கத்துடன் இருபுறமும் ிதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பரிவார செய்தவங்களாக கருடாழ்வார், விஸ்வசேனர் உள்ளனர். இக்கோயில் மிக சிறியதாக இருந்தாலும் முகமண்டபம், கருவறை, வெளிப்பிரகாரங்கள் அமைந்துள்ளன. கோயிலின் முன்பகுதியில் விசாலமான இடம் உண்டு.

எட்டு தூண்கள் கொண்ட முகமண்டபத்தின் நடுவே நின்ற கோலத்தில் கருடரும், தெற்கு நோக்கி விஸ்வசேனரும் உள்ளனர். கருவறை அந்தராளம் என அமைந்தது. கோயிலில் ேமல் விமானமும் உண்டு. மிகச்சிறிய இக்கோயிலில் 17 கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் மிகப்பழைய கல்வெட்டு 1149 ஆம் ஆண்டுடையது ஆகும். இக்கல்வெட்டுக்கள் நிபந்த கல்வெட்டுக்கள் ஆயினும் வைஷ்ணவ குடியேற்றம், ஆகமம் தொடர்பான செய்திகளை விளக்குகின்றன. இக்கோயிலை சுற்றிலும் பச்சைப்பசேல் வயல் வெளிகள், வான்ேநாக்கி வளர்ந்து நிற்கும் உயரமான தென்னை, அரச மரங்கள் என ஏராளமான உண்டு.

காலை, மாலை வேளையில் பெருமாளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், இறைவனின் பேரருள் கிடைப்பதோடு, இயற்கை அன்னையின் அரவணைப்பையும் பெருகின்றனர். 108 வைணவ தலங்களில் ஒன்றான திருப்பதிசாரம் பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள், புரவசேரி பெருமாளை தரிசனம் செய்ய தவறுவதில்லை. சனிக்கிழமைகளில் இங்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசிக்கின்றனர். திருப்பதியில் பிரமோற்சவ நடைபெரும் நாட்களில், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பக்தர்கள் இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்வார்கள்.

இதுமட்டுமின்றி தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அதிகம் வருவார்கள். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனம் உருகி ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கும் பெருமாளை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். இதனால் திருமணமாகாத பெண்கள், குழந்தை வரம் வேண்டும் பெண்கள். தொழில் நஷ்டத்தால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசித்து, விளக்கேற்றி வழிபாடு நடத்தி பெருமாளின் திருவருளை பெருகின்றனர் இங்கு ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

அன்றைய தினமும் புரவசேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சிறு குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஆலயத்திற்கு வருவார்கள். பக்தர்கள் பலர் அவர்களை கிருஷ்ணர், ராதை என பாவித்து வணங்குவதும் உண்டு. இக்கோயில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து காலை 7 மணிக்கு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து 8 மணிக்கு திருநடை சாத்தப்படும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மாலை 6 மணிக்கு தீபாராதனை நடைபெறும். பின்னர் 6.30 மணிக்கு நடை சாத்தப்படும்.

Tags : Perumali Perumali ,
× RELATED அறிவா? உணர்ச்சியா? எது தீர்மானிக்கிறது?