×

5ஜி அலைக்கற்றை ஏலத்தொகை 6 நாட்களில் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியது… 7வது நாளாக இன்றும் ஏலம்!!

டெல்லி : 5ஜி அலைக்கற்றை விற்பனை ரூ.1.50 லட்சம் கோடியை கடந்துள்ளது. தொடர்ந்து 7வது நாளாக இன்று ஏலம் நடைபெறுகிறது. அதிவேக இணையதள வசதியை கொடுக்கும் 5ஜி அலைக்கற்றை விற்பனைக்கான ஏலம் கடந்த 26ம் தேதி முதல் நடந்து வருகிறது.ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கெடுத்து அலைக்கற்றையை சொந்தமாக்கி வருகின்றன. முதல் நாள் ஏலத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரை ஏலம் கேட்கப்பட்டதாக ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்து இருந்தது. 2ம் நாள் முடிவில் இந்த தொகை ரூ.1,49,454 கோடி வரை கேட்கப்பட்டது. அதை தொடந்து 3-வது நாள் முடிவில் இந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் ரூ.1,49,623 கோடியை எட்டியது. நான்காம் நாள் ஏலத்தின் முடிவில், 23 சுற்றுகள் நடைபெற்ற ஏலத்தில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகை ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 855 கோடியை தாண்டியது. ஐந்தாம் நாள் ஏலத்தின் முடிவில், 30 சுற்றுகள் நடைபெற்ற ஏலத்தில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகை ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 967 கோடியை தாண்டியது.6வது நாளாக நேற்று 7 சுற்று ஏலம் நடந்தது. இதில் 163 கோடி ரூபாய்க்கு அலைக்கற்றை ஏலம் போனது. இதன் மூலம் கடந்த 6 நாட்களாக நடந்த 37 சுற்றுகளில்  5ஜி ஏலத்தில் ரூ.1,50,130 கோடிக்கு அலைக்கற்றை விற்பனை நடந்துள்ளது. இந்த ஏலம் 7வது நாளாக இன்றும் நீடிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு மட்டத்தில் ரேடியோ அலைகளுக்கான தேவை அதிகரித்ததை தொடர்ந்து அலைக்கற்றை ஏலம் 7வது நாளைக்கு தள்ளி போயுள்ளதாக தொலைத்தொடர்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post 5ஜி அலைக்கற்றை ஏலத்தொகை 6 நாட்களில் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியது… 7வது நாளாக இன்றும் ஏலம்!! appeared first on Dinakaran.

Tags : 5G ,Delhi ,Dinakaran ,
× RELATED இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு...