×

நடந்து சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு

கும்பகோணம்: கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதி ஆரோக்கியசாமி நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர். இவரது மனைவி சந்திரா(68). இவர் நேற்று காலை இறைச்சி வாங்குவதற்காக அருகில் உள்ள இறைச்சி கடைக்கு நடந்து சென்றார்.   அப்போது, சாலையோரம் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த ஒருவரும், பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் ஒருவருமாக இருந்த நபர்களை, சந்திரா கடந்து சென்றபோது ஹெல்மெட் அணியாமல் இருந்த நபர் வேகமாக வந்து சந்திரா அணிந்திருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 10 பவுன் தங்க தாலிச்சங்கிலியை பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பினர். இதுகுறித்து சந்திரா அளித்த புகாரின்பேரில் கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post நடந்து சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Sivaprakasam ,Arogyasamy Nagar ,Srinagar Colony ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கூத்தாநல்லூர் கிளை இடமாற்ற விழா